செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2023 (13:14 IST)

எதிர்கட்சிகள் எதிர்கட்சியாகவே இருக்க வேண்டும்மென தீர்மானித்துவிட்டனர்: பிரதமர் மோடி..!

PM Modi
எதிர்க்கட்சிகள் கடைசிவரை எதிர்க்கட்சிகளாகவே இருக்க வேண்டும் என தீர்மானித்து விட்டனர் என்று பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் 
 
பிரதமர் மோடி இன்று பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பேசியபோது, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்தியா என்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பெயர் குறித்தும் அவர் கடுமையாக தாக்கி பேசினார் 
 
பெயரில் இந்தியாவில் சேர்ப்பதால் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது என்றும் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். மேலும் எதிர்க்கட்சிகள் திசை தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றன மற்றும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அதிக நாட்களுக்கு எதிர் கட்சியாகவே இருக்க வேண்டும் என தீர்மானித்துவிட்டனர் என்றும் அதுதான் அவர்களின் தலையெழுத்தாக உள்ளது என்று தெரிவித்தார். 
 
இது போன்ற குறிக்கோள் அற்ற எதிர்க்கட்சிகளை நான் இதுவரை பார்த்ததே இல்லை என்றும் அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்
 
Edited by Mahendran