புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (15:20 IST)

ஆசிய விளையாட்டுப் போட்டி - ஹாக்கியில் தங்கம் வெல்லுமா இந்திய பெண்கள் அணி?

ஆசிய விளையாட்டு ஹாக்கிப் போட்டியில் ஜப்பானுடன் மோதும் இந்திய பெண்கள் அணி தங்கம் வெல்லும் முனைப்புடன் பிராக்டீஸ் செய்து வருகிறது.
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஹாக்கி இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது.
 
அரை இறுதியில் சீனாவுடன் மோதிய இந்திய பெண்கள் அணி 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
 
இந்நிலையில் இந்திய அணி இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜப்பான் அணியுடன் மோத இருக்கிறது.
 
இரு அணிகளுமே பலமாக இருப்பதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு இருக்கும் என கணிக்க முடியவில்லை. எனினும் இந்திய பெண்கள் அணி ஜப்பானை வீழ்த்த கடுமையாக பிராக்டீஸ் செய்து வருகிறது.