திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (18:27 IST)

வில்லியம்சன் இரட்டை சதம்.. பதிலடி கொடுக்குமா பாகிஸ்தான்?

williamson
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்துள்ளார். 
 
கடந்த 26 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 438 ரன்கள் எடுத்தது என்பதும் பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் சல்மான் ஆகிய இருவரும் சதம் அடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் வில்லியம்சன் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். அதேபோல் டாம் லாத்தம் 113 ரன்கள் அடித்தார். இதனை அடுத்து நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 612 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது
 
தற்போது பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் நிலையில் 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்து 97 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்த போட்டி டிராவை நோக்கி நகர்ந்து செல்வதாக தெரிகிறது.
 
Edited by Mahendran