1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 28 டிசம்பர் 2022 (17:57 IST)

கடும் பண நெருக்கடி.. அமெரிக்க தூதரக அலுவலகத்தை விற்பனை செய்யும் பாகிஸ்தான்

pakistan
கடும் பண நெருக்கடி.. அமெரிக்க தூதரக அலுவலகத்தை விற்பனை செய்யும் பாகிஸ்தான்
கடும் பண நெருக்கடி காரணமாக அமெரிக்காவில் உள்ள தூதரகத்தை பாகிஸ்தான் விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
பாகிஸ்தானின் கடன்கள் அதிகமாகி வரும் நிலையில் அந்நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
 
ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள அரசு அலுவலகங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக கட்டிடத்தை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த கட்டிடத்தை ஏலம் எடுக்க பலர் முன் வருவதாகவும் சுமார் 4 மில்லியன் டாலருக்கு இந்த கட்டிடம் ஏலம் போகும் என்று கூறப்படுகிறது
 
Edited by Mahendran