வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (11:11 IST)

ஒமிக்ரான் வைரஸ் பரவல்… ஐபிஎல் இந்த ஆண்டும் பாதிக்கப்படுமா?

ஐபிஎல் தொடர் ஏப்ரல் மே மாதங்களில் இந்தியாவில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடக்கவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவில் பாதியும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாதியுமாக நடந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்ததால் இந்த ஆண்டு கண்டிப்பாக இந்தியாவில் நடத்த வேண்டும் என்ற முடிவில் பிசிசிஐ இருந்தது.

ஆனால் இப்போது ஒமிக்ரான் உருமாறிய வைரஸ் பரவல் அலை மீண்டும் எழும்ப தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்துவதில் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அப்படி பாதிப்பு ஏற்பட்டால் கடந்த ஆண்டுகளை போல ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படுமா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.