செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 28 டிசம்பர் 2020 (11:32 IST)

மளமளவென விக்கெட்களை இழக்கும் ஆஸி – இன்னிங்ஸ் வெற்றி பெறுமா இந்தியா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி தொடங்கிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் ஆடிய இந்திய அணி கேப்டன் ரஹானேவின் சதத்தால் 326 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 131 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் தொடர்ந்து ஆடிய ஆஸி அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.

சற்று முன்புவரை ஆஸி 104 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்களை இழந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பந்து வீசிய அனைவருமே விக்கெட் வீழ்த்தியுள்ளனர். ஆஸி இப்போது இந்தியாவை விட 27 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில் இன்னும் 4 விக்கெட்களை எடுத்தால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.