டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி: பொல்லார்டு எடுத்த அதிர்ச்சி முடிவு
மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே நடைபெற்று முடிந்த டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது
இந்த நிலையில் இன்று சென்னையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன்னர் போடப்பட்ட நிலையில் இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் பொல்லார்டு பந்துவீச முடிவெடுத்துள்ளார். இதனை அடுத்து இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது
இந்திய அணியில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், கேதார் ஜாதவ் , ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் உள்ளனர். இதேபோல் மேற்கிந்திய தீவுகள் அணியில் ஹோப், சுனில் அம்ரிஸ், ஹெட்மயர், பூரன், சேஸ், பொல்லார்டு, ஹோல்டர், கீமோ பால், வால்ஷ், ஜோசப் மற்றும் காட்ரான் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னையில் முதலில் பேட்டிங் செய்வதுதான் சிறந்தது என்ற நிலையில் டாஸ் வென்ற பொல்லார்டு பந்துவீச்சை தேர்வு செய்தது அதிர்ச்சிகரமான முடிவு என்று வர்ணனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.