வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 17 ஜூலை 2019 (14:16 IST)

தோனியோட ஜாதக்கப்படி... ஓய்வை கணித்த பாலாஜி ஹாசன்: ரசிகர்கள் அப்செட்!!

பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் தோனி எப்போது ஓய்வை அறிவிப்பார் என கணித்து கூறியுள்ளார். 
 
பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் என்பவர் சமீப காலமாக இணையத்தில் வைரலாகி வருபவர். சேலத்தை சேர்ந்த இவர் உலகக்கோப்பை வெற்றி குறித்து கணித்து கூறியதன் மூலம் சமூக வலைத்தளங்களில் வைரலானவர்.  
 
உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் தகுதி பெறும், இறுதிப் போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் என்றும் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்படுவார் என்றும் இவர் கணித்திருந்தார். 
இந்நிலையில் தற்போது தோனியின் ஓய்வு கணித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தோனி உடனடியாக ஓய்வு பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. தோனியின் ஜாதகத்தின் படி அவர் 2019 குருபெயர்ச்சி பின்னர் ஓய்வை அறிவிப்பார். அதாவது நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் அவர் தனது ஓய்வை அறிவிக்க கூடும். 
 
அப்படி இல்லையென்றால் 2020 உலகக்கோப்பைக்கு பின்னர் தனது ஓய்வை அறிவிப்பார். தற்போதைய சூழ்நிலையில் அவர் ஓய்வை அறிவிக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். 
தோனி உடனடியாக ஓய்வை அறிவிக்க மாட்டார் என்ற செய்தி மகிழ்ச்சியை தந்தாலும், நாமபர் அல்லது டிசம்பரில் ஓய்வை அறிவிக்க கூடும் என தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களை கவலையடை செய்துள்ளது. 
 
அதோடு, வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்று பயண ஆட்டத்திற்கு செல்லும் இந்திய அணியில் ஒருவேளை தோனி தேர்ந்தெடுக்கப்பட்டாலும் 11 வீரர்களில் ஒருவராய் இருக்கமாட்டார். அணியில் உள்ள 15 வீரர்களில் ஒருவராய் இடம் பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.