திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (17:54 IST)

சென்னை சூப்பர் கிங்ஸ்கில் என்ன பிரச்சனை ? முக்கிய வீரர் விலகல் ! ரசிகர்கள் அதிர்ச்சி

பல கட்ட  எதிர்ப்பார்ப்புகள் பரபரப்புகளுக்கு இடையே நடப்பு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது.

அதனால் வீரர்களுக்கு பல கோடி செலவில் தினமும் கொரொனா பரிசோதனைகள் செய்ய பிசிசியை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மற்ற அணிகள் எப்படியோ ஆனால் சென்னை கிங்ஸ் அணியின் ஒவ்வொரு வீரரைப் பற்றிய செய்திகளும் டிரெண் ஆகிவிடும்.

இந்நிலையில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்  பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்,  சொந்தக் காரணங்களால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அணியில் ஏதேனும் பிரச்சனையா அல்லது,  வேறேதாவது காரணமா வீரர்கள் என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.