1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (14:24 IST)

சி எஸ் கே அணிக்கு மேலும் ஒரு இழப்பு… ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்?

எஸ் கே அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் 2020 தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் டி20 போட்டிகள் அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள் ஏற்கனவே அரபு அமீரகம் சென்றடைந்துள்ளன. முன்னதாக அமீரகம் செல்வதற்கு முன்பாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் பயிற்சி மேற்கொண்டனர். இப்போது துபாய்க்கு சென்று அங்கு தனிமைப்படுத்தல் காலம் முடிந்து விரைவில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில் சி எஸ் கேவின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் சொந்த காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகுவதாக அணி நிர்வாகத்திடம் எழுத்துப் பூர்வமாக கடிதம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. ஏற்கனவே சி எஸ் கே வின் துணைக் கேப்டன் ரெய்னா தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.