1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2017 (06:31 IST)

கோஹ்லி இல்லை, டிவில்லியர்ஸ் இல்லை. அப்ப பெங்களூருக்கு யார்தான் கேப்டன்

காயம் காரணமாக ஐபிஎல் போட்டியின் ஒருசில ஆட்டங்களில் இருந்து விராத்கோஹ்லி விலகியுள்ளதால் டிவில்லியர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய போட்டியில் டிவில்லியர்ஸும் திடீரென விலகிவிட்டதால் தற்போது வாட்சன் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.


 


முன் எப்போதும் இல்லாத அளவில் இந்த ஐபிஎல் போட்டியில் பல முன்னணி வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். குறிப்பாக பெங்களூர் அணிக்கு சோதனை மேல் சோதனை ஏற்பட்டுள்ளது.

அதேபோல் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடவுள்ள ஐதராபாத் அணியில் வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான் போட்டியில் கலந்து கொள்ளமாட்டார் என்றும் வரும் 7-ந்தேதி அவர் அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இன்றும், 6-ந்தேதியும் இலங்கைக்கு எதிராக டி20 போட்டியில் விளையாட உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் உள்ளார் என்பது தெரிந்ததே