ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி டக் அவுட்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி 4 பந்துகள் மட்டுமே விளையாடி ரன் ஏதும் எடுக்காமல் போல்டு ஆகி விட்டார். அதேபோல் கேஎல் ராகுல் வெறும் 6 ரன்களில் அவுட் ஆகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இருப்பினும் கேப்டன் ரோகித் சர்மா 72 ரன்கள் அடித்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது