திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (11:03 IST)

U-19 உலகக்கோப்பை: அரையிறுதியில் இந்தியா - ஆஸி. இன்று பலப்பரீட்சை

U-19 உலகக்கோப்பை: அரையிறுதியில் இந்தியா - ஆஸி. இன்று பலப்பரீட்சை
18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன
 
இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த தொடரின் ஆரம்பம் முதலே இந்திய அணி பிரமாதமாக விளையாடி வரும் நிலையில் இன்றைய போட்டியிலும் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்பதே அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது