செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (13:45 IST)

மக்களுக்கு எந்த பயனும் இல்லை.. ஜீரோ பட்ஜெட் இது! – மம்தா விமர்சனம்!

மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் மக்களுக்கு சாதகமான சலுகைகள் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள், புதிய திட்டங்கள், கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி “மக்கள் வேலையின்மையாலும், பண வீக்கத்தாலும் நசுக்கப்படுகிறார்கள். ஆனால் மக்களுக்கு தேவையான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை. பெரிய அறிவுப்புகள் எதுவும் இல்லாத ஜீரோ பட்ஜெட்டாக உள்ளது” என்று விமர்சித்துள்ளார்.