1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (15:00 IST)

U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலியாவின் முடிவு..!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது.

சற்று முன் வரை ஆஸ்திரேலியா அணிய இரண்டு விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் இந்தியாவின் பந்துவீச்சாளர் லிம்பாணி மற்றும் திவாரி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் வெல்லும் அணி உலக கோப்பை சாம்பியன் என்பதால் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்த நிலையில் அதற்கு பழி வாங்கும் விதமாக ஆஸ்திரேலியா அணியை வென்று இந்திய அணி கோப்பையை பெற வேண்டும் என்று ஏராளமான இந்தியர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Edited by Siva