பேட்டிங் செய்யும்போது டான்ஸ் ஆடி வெறுப்பேற்றிய வங்கதேச பேட்ஸ்மேன்!
வங்கதேச அணி ஜிம்பாப்வேக்கு சென்று இப்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
வங்கதேச அணி தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வங்கதேச கிரிக்கட் அணியின் வீரர் டஸ்கின் அகமது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இவர் டெய்ல் எண்டரக களமிறங்கிய ஜிம்பாப்வே பவுலர்களுக்கு தண்ணிக்காட்டி விளையாடி வந்தார். இவரின் விக்கெட்டை எடுக்க பவுலர்கள் கடுமையான முயற்சி செய்தனர். அப்போது டஸ்கின் அகமது பேட் செய்யும்போது பந்தை ஸ்டைலாக விலகிவிட்டு நடனமாடி பவுலர்களை வெறுப்பேற்றினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.