ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 28 செப்டம்பர் 2020 (06:38 IST)

சொந்த சாதனையை முறியடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்: குவியும் பாராட்டுகள்

சொந்த சாதனையை முறியடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்: குவியும் பாராட்டுகள்
நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 224 என்ற இலக்கை எட்டி ராஜஸ்தான் அணி மிக அபாரமாக வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் மிக அதிகபட்ச சேசிங் ஸ்கோர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த 2008 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய ராஜஸ்தான் அணி 217 ரன்கள் என்ற இலக்கை எட்டியதே இதுவரை ஐபிஎல் வரலாற்றில் மிக அதிகபட்சமாக சேசிங் செய்த ஸ்கோர் ஆக இருந்தது 
 
இந்த நிலையில் நேற்று 224 என்ற இலக்கை எட்டி வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி தனது சாதனையை தானே முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் கடந்த 2014ஆம் ஆண்டு குஜராத் அணிக்கு எதிராக விளையாடிய டெல்லி அணி 214 ரன்கள் சேஸ்செய்தது என்பதும், 2014 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய பஞ்சாப் அணி 211 ரன்களை சேஸ் செய்தது என்பதும் 2012ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 208 என்ற இலக்கை சேஸ் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது