கால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனா மறைவு: அதிர்ச்சியில் ரசிகர்கள்
கால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனா மறைவு: அதிர்ச்சியில் ரசிகர்கள்
உலகின் மிகப் பெரிய கால்பந்தாட்ட வீரரான மாரடோனா சற்று முன்னர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 60
மாரடோனா மறைவு அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூளை அறுவை சிகிச்சைக்காக அர்ஜென்டினா தலைநகரில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து குணமாகி அவர் வீடு திரும்பிய நிலையில் திடீரென இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது
இதனை அடுத்து அவரை கவனித்துக் கொள்ள பிரத்யேகமாக நியமிக்கப்பட்டிருந்த செவிலியர் முதலுதவி கொடுத்துக் கொண்டிருக்கும் போதே அவரது உயிர் பிரிந்து விட்டதாக தெரிகிறது. மாரடோனாவின் மறைவை அவரது வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார்
தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் கோல் மழை போட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்த மாரடோனா இன்று அதே ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி காலமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது