புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (08:53 IST)

சூதாட்ட சர்ச்சையில் டி.என்.பி.எல்: பிசிசிஐ கெடுபிடி!

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சில வீரர்களை சூதட்டத்தில் ஈடுபட அழைத்ததாக பிசிசிஐ-க்கு புகார் வந்துள்ளது. 
 
ஆண்டுதோறும் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி போல, டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரும் சென்னையின் சேப்பாக்க கிரிக்கெட் மைதானத்தை மையமாக கொண்டு நடக்கும். இந்த தொடரை இந்திய கிரிக்கெட் வீரர் தோனி துவங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் சில வீரர்களை சூதாட்டத்திற்கு அழைத்ததாக பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார் வந்துள்ளது. எனவே இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. 
இந்த புகார் குறித்து ஊழல் தடுப்பு பிரிவு தலைமை அதிகாரி அஜீத் சிங் தெரிவித்ததாவது, டி.என்.பி.எல் விளையாடும் சில வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபட மர்ம நபர்கள் மெசேஜ் அனுப்பியுள்ளதாக புகார் வந்துள்ளது.
 
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படவுள்ளது. மேலும், விசாரணைக்கு பின்னரே இது குறித்து முழு விவரம் வெளியிடப்படும் என அஜீத் சிங் தெரிவித்தார். 
 
டி.என்.பி.எல் தொடரில், ரவிச்சந்திரன் அஸ்வின், முரளி விஜய், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.