புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (07:30 IST)

முத்தரப்பு டி20 போட்டி: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

ஜிம்பாப்வே ,ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாவே அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
 
இந்த வெற்றியை அடுத்து ஆப்கானிஸ்தான் அணி 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஏற்கனவே வங்கதேசம் 2 புள்ளிகளை எடுத்துள்ளது என்பதும் ஜிம்பாவே இன்னும் புள்ளிக்கணக்கை தொடங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ஸ்கோர் விபரம்:
 
ஆப்கானிஸ்தான்: 197/5 20 ஓவர்கள்
 
நஜ்புலா ஜாட்ரான்: 69
ரஹ்மானுல்லா: 43
முகமது நபி: 38
 
ஜிம்பாவே: 169/7 20 ஓவர்கள்
 
ஜக்காப்வா: 42
டெய்லர்: 27
பர்ல்: 25
 
ஆட்டநாயகன்: நஜ்புலா ஜாட்ரான்
 
இந்த தொடரின் அடுத்த போட்டி இன்று வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் 24ஆம் தேதி டாக்காவில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது