திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 17 பிப்ரவரி 2022 (11:33 IST)

13 பந்துகளில் அரைசதம்… சாதனைப் படைத்த சுனில் நரேன் !

வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த சுனில் நரேன் 13 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

வங்காளதேச ப்ரிமியர் லீக்கில் இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழல்பந்து வீச்சாளரும் அதிரடி பேட்ஸ்மேனுமான சுனில் நரேன் விளையாடி வருகிறார். தன்னுடைய மாயாஜால சுழல்பந்து வீச்சாள் பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைக்கும் நரேன், பேட்டிங்கிலும் எதிரணி வீரர்களை நடுங்க வைக்கும் திறமைக் கொண்டவர்.

ஐபிஎல் தொடரின் பல போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக அதிரடியாக விளையாடி சிக்சர் மழை பொழிந்துள்ளார். இந்நிலையில் நேற்று பங்களாதேஷ் பிரிமியர் லீக்கில் கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர் 13 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலம் அதிவேகமாக டி 20 போட்டிகளில் அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இந்திய வீரர் யுவ்ராஜ் சிங் 12 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்ததே இன்றளவும் சாதனையாக உள்ளது.

இந்த அதிர்டி ஆட்டத்தில் நரேன் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை விளாசி 16 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். நரேனின் அதிரடியால் கொமிலா அணி எளிதாக இலக்கை எட்டி வெற்றி பெற்றது.