ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (17:15 IST)

சூப்பர் ஸ்டார் படத்தின் அடுத்த சிங்கில் ரிலீஸ்... இணையதளத்தில் வைரல்...யூடியூபில் சாதனை

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் 'சர்க்காரு வாரு பாட்டா ' படத்தின் அடுத்த சிங்கில் #Kalaavathi  வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
பிரபல இயக்குநர் பரசுராம் இயக்கத்தில், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சர்காரு வாரு பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படத்தில் மகேஷ்பாபு, கீர்த்திசுரேஷுடன் பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளனர்.இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் இடம்பெற்றுள்ள  கலாவதி என்ற பாடலை சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். இப்பாடல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும்,  #Kalaavathi  இப்பாடல் ரிலீஸ் செய்த 1 மணி நேரத்தில் இதுவரை சுமார் 6 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கியுள்ளது. சுமார் 300 லட்சம் பேர் இப்பாடலுக்கு லைக்குகள் பதிவிட்டுள்ளார். இப்பாடம் பெரும் சாதனை படைக்கும் என தெரிகிறது.