புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 9 பிப்ரவரி 2022 (17:24 IST)

மோசமான பேட்டிங்…. காப்பாற்றிய சூர்யகுமாரின் அரைசதம் – இந்தியா ரன்கள் சேர்ப்பு!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா  9 விக்கெட் இழந்து ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் மோசமாக பேட் செய்து அவ்ட் ஆகி ஏமாற்றம் அளித்துள்ளனர்.

ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட் மற்றும் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கே எல் ராகுல் 49 ரன்களும். சூர்யகுமார் யாதவ் 64 ரன்களும் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆனால் அவர்கள் அவுட் ஆன பின்னர் மீண்டும் அணி சரிய தொடங்கியது. இதனால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 237 ரன்கள் மட்டுமே சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பாக அந்த அணியின் அல்சாரி ஜோசப் மற்றும் ஒடீன் ஸ்மித் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.