இறுதி போட்டியிலாவது வெற்றிப் பெறுமா இலங்கை?
கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 238 ரன்கள் குவித்துள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகளில் இந்திய அணி வெற்றுப்பெற்றது குறிப்பிடத்தக்கது. இன்று கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. 49.4 ஓவர் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 238 ரன்கள் குவித்துள்ளது. இலங்கை அணியின் கேப்டன் தரங்கா அதிரடியாக ஆடி அணிக்கு வேகமாக ரன் குவித்தார். 34 பந்துகளில் 48 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து திருமண்ணே மற்றும் மேத்யூஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருவரும் அரை சதம் கடந்தனர். இருவரும் ஆட்டமிழக்க இவர்களை தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்நிலையில் இந்திய அணிக்கு வெற்றிப்பெற 239 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.