புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (22:13 IST)

இந்திய அணி அபார வெற்றி: 2019 உலகக்கோப்பை வாய்ப்பை இழந்த இலங்கை!!

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 


 
 
இந்திய அணி முதல் 3  ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனெவே தொடரையும் கைப்பற்றிவிட்டது. தற்போது இன்று நடைபெற்ற 4 ஆம் ஒரு நாள் பொட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை காட்டிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 375 ரன்களை குவித்தது. 
 
ரோகித் ஷர்மா 104, கோலி 131, மனிஷ் பாண்டே 50 மற்றும் தோனி  49 ரன்களை குவித்தனர். 376 என்ற இலக்குடன் களமிறங்கியது இலங்கை அணி.
 
இலங்கை அணி 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளியும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
இலங்கை இந்த தோல்வியினால் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை வாய்ப்பை இழந்துள்ளது.