1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 20 டிசம்பர் 2017 (19:38 IST)

டாஸ் வென்ற இலங்கை; விக்கெட் இழந்த இந்தியா: டி20 போட்டி விறுவிறுப்பு!!

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி இன்று ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பாரப்பட்டி மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
 
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதுவரை இரு அணிகளுக்கிடையே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் நிறைவடைந்துள்ளது. டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.
 
இந்நிலையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றியது போல டி20 தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. ஆனால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி டி20 தொடரிலாவது வென்று ஆறுதல் அடைய திட்டமிட்டுள்ளது.
 
தற்போது நடைபெற்று வரும் போட்டியில் 6 ஓவர்களின் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் குவித்துள்ளது. லோகேஷ் ராகுல் 23 ரன்கலுடனும், ஸ்யாஸ் ஐயர் 9 ரன்கலுடனும் களத்தில் உள்ளனர்.