செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 அக்டோபர் 2022 (17:51 IST)

இந்த வாரம் பாகிஸ்தான், அடுத்த வாரம் இந்தியா: சோயிப் அக்தர்!

Sohaib
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்த வாரம் பாகிஸ்தான் வெளியேறினால் அடுத்த வாரம் இந்தியா வெளியேறும் என சோயப் அக்தர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய இரண்டு அணிகளிடமும் பாகிஸ்தான் தோல்வி அடைந்துள்ளதால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது
 
 இந்த நிலையில் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தான் இந்த வாரம் வெளியேறி நாடு திரும்புகிறது என்றால் செமி பைனலில் தோல்வி அடைந்து இந்திய அடுத்த வாரம் தாய்நாடு திரும்பும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார் 
 
சோயிப் அக்தரின் இந்த கருத்துக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran