டாஸ் வென்ற டெல்லி அணி: பேட்டிங் செய்யும் சிஎஸ்கே
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதவுள்ளன. சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தார். இதனால் சென்னை அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்யவுள்ளது.
காம்பீருக்கு பதில் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பொறுப்பை ஏற்றவுடன் கடந்த 27ஆம் தேதி கொல்கத்தா அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த போட்டியில் ஸ்ரேயாஸ் 93 ரன்கள் அடித்து அசத்தினார். இதே ஆட்டத்தை இன்றும் அவர் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் கடந்த போட்டியில் மும்பை அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி, மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பெற இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நிலை உள்ளது. இதனால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.