1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 27 ஜூலை 2022 (19:43 IST)

செஸ் ஒலிம்பியாட் 200 கோடிகள் செலவு தமிழனின் வரி, பிறகெதற்கு மற்றவரின் படம்? சரவணன் அண்ணாதுரை

saravanan
செஸ் ஒலிம்பியாட் 200 கோடிகள் செலவு தமிழனின் வரி, பிறகெதற்கு மற்றவரின் படம்? சரவணன் அண்ணாதுரை
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போஸ்டர்களில் பிரதமரின் படம் இடம்பெறவில்லை என பாஜக குற்றம் சாட்டி வரும் நிலையில் இதுகுறித்து திமுகவின் சரவணன் அண்ணா துரை தனது டுவிட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார்
 
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ரஷ்யாவில்  நடக்கவிருந்த #ChessOlympiad போரினால் @FIDE_chess  வேறு நாட்டில் நடத்த முடிவு செய்கிறது.   @aicfchess
, தமிழ்நாடு அரசுடன் எடுத்த முயற்சிகளால் சென்னையில் நடக்கிறது. முதல்வர் 
@mkstalin  கொடுத்த ஊக்கமே காரணம்.200 கோடிகள் செலவு தமிழனின் வரி, பிறகெதற்கு மற்றவரின் படம்? 
 
 இந்த பதிவை பார்த்து நெட்டிசன்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நேரடியாக ரஷ்யாவே தமிழக அரசை தொடர்பு கொண்டு இந்த போட்டியை நடத்த கேட்டுக்கொண்டதா? என்றும் அரசின் முதலில் மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அமைச்சகம் அனுமதி கேட்டது என்றும் மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் தான் இந்த போட்டியை தமிழகத்தில் நடத்த அனுமதி அளித்தது என்றும் கூறியுள்ளனர்
 
இந்த அடிப்படை உண்மை கூட தெரியாமல் சரவணன் அண்ணாதுரை பதிவு செய்துள்ளது பெரும் வருத்தத்துக்குரியது என்று நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் குறிப்பிட வேண்டும்