1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 27 ஜூலை 2022 (13:09 IST)

எல்லா இடங்களிலும் மோடியின் படம் – தமிழிசை!

இனி எல்லா இடங்களிலும் மோடியின் படம் இடம் பெற வேண்டும் என தமிழிசை வேண்டுகோள்.

 
தமிழகத்தில் நாளை முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்னை வரவுள்ளார் என்பதும் தொடக்கவிழா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த போஸ்டரில் தமிழக முதல்வரின் புகைப்படம் மட்டுமே உள்ளது என்றும் பிரதமர் புகைப்படம் இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.

இதனை அடுத்து செஸ் ஒலிம்பியாட் போஸ்டரில் பாஜக நிர்வாகிகள் மோடியின் படத்தை ஒட்டி வருகின்றனர். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது, சென்னையில் தேசிய பெருமை வாய்ந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இது மகிழ்ச்சியான ஒன்றுதான் என்றாலும் இதில் எனக்கு ஒரு ஆதங்கம் உள்ளது. ஆம், நம் நாட்டின் அடையாளமாக இருக்கும் பிரதமர் மோடியின் புகைப்படம், செஸ் ஒலிம்பிடாய் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் எங்குமே வைக்கப்படவில்லை.

இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனிக்க வேண்டும். இனி எல்லா இடங்களிலும் மோடியின் படம் இடம் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.