புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 22 ஜனவரி 2022 (20:26 IST)

ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன், மீண்டு வருவேன்: சுட்டிக்குழந்தை சாம் கர்ரன் டுவிட்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாகவும் ஆனால் மீண்டு வருவேன் என்றும் சாம் கர்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஆன சாம் கர்ரன் பல போட்டிகளில் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறார் என்பதும் சுட்டிக் குழந்தை என்று அவரை தமிழக மக்கள் செல்லமாக அழைப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் கண்டிப்பாக அடுத்த ஆண்டு மீண்டும் வருவேன் என்றும் சாம் கர்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து சாம் கர்ரன் விலகி உள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது