புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 (14:44 IST)

ஒரே நேரத்தில் 5 கின்னஸ் சாதனைகளை முறியடித்த சேலம் கராத்தே வீரர்

சேலத்தை சேர்ந்த கராத்தே பயிற்சியாளர் ஒருவர் 5 வகை கின்னஸ் சாதனைகளை ஒரே நேரத்தில் முறியடித்துள்ளார்.
சேலம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த நடராஜ், கராத்தே பயிற்சியாளர். பள்ளி மாணவர்களுக்கு கராத்தே கலையை இவர் கற்றுக்கொடுத்து வருகிறார்.
 
முதல் சாதனையாக 650 ஸ்ட்ராவை கையால் பிடிக்காமல் 2.10 நிமிடம் தனது வாயில் வைத்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
 
கடந்தாண்டு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் குமார்  என்பவர் 459 ஸ்ட்ராவை வாயில் நுழைத்து 10 வினாடி வரை வைத்திருந்த கின்னஸ் சாதனையை நடராஜ் முறியடித்துள்ளார்.
 
# இரண்டாவது சாதனையாக 692 ஸ்ட்ராவை கையால் பிடித்துக்கொண்டு வாயில் 2.56 நிமிடம் வைத்து நடராஜ் சாதனை படைத்துள்ளார்.
 
2011ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த  ரிஷ் என்பவர் 496 ஸ்ட்ராவை கையால் பிடித்து 10 வினாடி வாயில் வைத்து  நடத்திய சாதனையை நடராஜ் முறியடித்துள்ளார்.
 
# மூன்றாவது சாதனையாக 4 அங்குல  ஆணிகளை 30 வினாடிகளில் 18 முறை மூக்கில் நுழைத்து சாதனை நிகழ்த்தினார்.
2015 ஆம் ஆண்டு கனடா நாட்டை சேர்ந்த பர்னாபி கியூ ஆர்பெக்ஸ் என்பவர் செய்த சாதனையான 4 அங்குல ஆணிகளை 30 வினாடியில் 15 முறை மூக்கில் நுழைத்ததை நடராஜ் முறியடித்துள்ளார்.
 
# நான்காவது முயற்சியாக 4 அங்குல ஆணியை 30 வினாடியில் 32 முறை மூக்கில் நுழைத்து புதிய சாதனையை நடராஜ் படைத்துள்ளார்.
 
# ஐந்தாவது முயற்சியாக  கயிற்றில் தலைகீழாக தொங்கியவாறு 45 வினாடியில் 560 மில்லி லிட்டர் தண்ணீர்  குடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.