திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 6 பிப்ரவரி 2021 (12:32 IST)

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #IStandWithSachin என்ற ஹேஷ்டேக்!

சச்சினுக்கு ஆதரவாக ட்விட்டரில் ட்ரெண்டாகும் #IStandWithSachin என்ற ஹேஷ்டேக். 

 
டெல்லியில் விவசாயிகள் 80 நாளுக்கும் மேலான தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கான இணையதளத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,டெல்லியில் நுழையமுடியாதபடி ஆணித்தடுப்பு தடுப்புச்சுவர்களும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக சில வெளிநாட்டு பிரபலங்கள் டிவீட் செய்ததை அடுத்து இந்திய வீரர் சச்சின் ‘இந்தியாவின் தேசிய இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிநாட்டில் வசிப்போர் பார்வையாளர்களாக மட்டும் இருங்கள் பங்கேற்பாளர்களாக வேண்டாம். இந்தியர்களுக்கு இந்தியாவைப் பற்றித் தெரியும். இந்தியா ஒற்றுமையால் கட்டமைக்கப்பட்டது’ எனத் தெரிவித்தார். இந்த டிவீட் இந்திய மக்களை கொந்தளிக்கவைத்துள்ளது. இதையடுத்து சச்சினுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 
ஆனால், சச்சின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக #IStandWithSachin என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். சச்சின் நாட்டின் ஒற்றுமைக்காகவெ எபேசினார் எனவும் தெரிவித்து வருகின்றனர்.