ஐபிஎல் ஏலத்திற்கு வரும் சச்சின் மகன்: மும்பை அணி கொக்கி போடுமா?

Sugapriya Prakash| Last Modified சனி, 6 பிப்ரவரி 2021 (08:11 IST)
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ளார். 

 
சென்னையில் ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 18 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என தெரிவித்தப்பட்டுள்ளது. இந்தாண்டு நடைபெறவுள்ள ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1097 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  
 
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ளார். ஏலத்திற்கு அவருக்கான குறைந்தபட்ச விலை 20 லட்சம் என்று கூறப்படுகிறது. சச்சின் மகனுக்கு கிரிக்கெட் அனுபவம் குறைவு என்பதால் மும்பை அணி இவரை ஏலத்தில் எடுக்குமா என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.  
 
2021 ஐபிஎல் தொடருக்காக 8 அணிகளும் சேர்த்து மொத்தம் 57 வீரர்களை விடுவித்துள்ள நிலையில், ஐபிஎல் வரலாற்றில் சென்னையில் முதல் முறையாக அதற்கான ஏலம் நடைபெறுகிறது என்பது கூடுதல் தகவல். 


இதில் மேலும் படிக்கவும் :