வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 5 ஜூன் 2019 (14:49 IST)

உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ள நிலையில் சற்றுமுன் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
 
இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்கள் குறித்த தகவல்:
 
இந்தியா: ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராத் கோஹ்லி, கே.எல்.ராகு, கேதார் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், சாஹல் மற்றும் பும்ரா
 
தென்னாபிரிக்கா: டீகாக், ஆம்லா, டூபிளஸ்சிஸ், டூசன், மில்லர், ஃபிலுக்யோயா, மோரீஸ், ரபடா, ஷாம்சி மற்றும் இம்ரான் தாஹிர்
 
தென்னாப்பிரிக்கா அணி ஏற்கனவே விளையாடிய இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேபோல் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இந்திய அணி உள்ளது. எனவே இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என கருதப்படுகிறது