ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2019 (13:07 IST)

இது சும்மா ட்ரெய்லர்தான்! அடுத்த வருஷம்தான் சம்பவமே இருக்கு! – ரோகித் சூசகம்!

இந்தாண்டில் அதிக ரன்கள் அடித்த சாதனையை படைத்துள்ள ரோகித் ஷர்மா இதை விட அடுத்த ஆண்டு சிறப்பாக ஆடப்போவதாக தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இந்த தொடரில் அபாரமாக ஆடி ரன்கள் பெற்ற ரோகித் ஷர்மா தொடரின் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

மேலும் இந்த ஆண்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையையும் ரோகித் ஷர்மா பெற்றுள்ளார். 1997ம் ஆண்டு இலங்கை வீரர் ஜெயசூர்யா 2,387 ரன்கள் பெற்றதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. தற்போது இந்த சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய ரோகித் சர்மா ”இந்த ஆண்டு நான் ஆடிய பேட்டிங்கை நானே ரசித்தேன். இது இத்தோடு முடிந்து விடவில்லை. அடுத்த ஆண்டு இதை விட சிறப்பான ஆட்டம் தொடரும். இந்தியா உலக கோப்பை  மட்டும்தான் வெல்லவில்லையே தவிர மற்ற அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடியுள்ளது” என கூறியுள்ளார்.