1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2022 (14:24 IST)

விபத்து ஏற்பட்டது எப்படி: கண்விழித்த ரிஷப் பண்ட் வாக்குமூலம்!

rishap
பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் இன்று காலை விபத்துக்குள்ளான நிலையில் ரிஷப் பண்ட் கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இந்த நிலையில் சற்று முன் அவர் மருத்துவமனையில் கண் விழித்த நிலையில் போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர். அப்போது காரை தானே ஓடியதாகவும் காரை ஓட்டிக் கொண்டிருந்த போது தூக்கம் காரணமாக அசந்து விட்டதாகவும் அதனால்தான் விபத்துக்குள்ளானதாகவும் ரிஷப் பண்ட் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 
 
இதனை அடுத்து இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ரிஷப் பண்ட் காலில் லேசாக எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் முழுமையாக குணம் அடைய இன்னும் சில நாட்கள் ஆகும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
 
Edited by Mahendran