திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 1 ஜனவரி 2024 (17:33 IST)

மெஸ்ஸியின் ஜெர்சி நம்பர் 10 க்கு ஓய்வு - அர்ஜென்டினா கால்பந்து வாரியம்

messi jersey 10
சர்வதேச கால்பந்து விளையாட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மெஸ்ஸி. அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த இவர்,  சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தேசிய அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

 தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த இண்டர் மியாமி அணிக்காக மெஸ்ஸி விளையாடி வருகிறார். 
 
இண்டர் மியாமி அணிக்காக சிறந்த முறையில் விளையாடி கோல் அடித்து அணிக்குப் பெருமை சேர்த்து வருகிறார் மெஸ்ஸி.
 
இந்த நிலையில்,  மெஸ்ஸியின் ஜெர்சி நம்பர் 10 க்கு ஓய்வு அறிவித்துள்ளது அர்ஜென்டினா கால்பந்து வாரியம்.
 
அர்ஜென்டினா அணியில் இருந்து மெஸ்ஸி ஓய்வு பெற்ற பிறகு இந்த ஜெர்சியை யாரும் பயன்படுத்த முடியாது, இது அவருக்கு நாங்கள் அளிக்கும் சிறிய கவுரவம் என அர்ஜென்டினா கால்பந்து வாரியத் தலைவர் கிளாடியோ டாபியா பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.