சிஎஸ்கே அணிக்கு 71 ரன்கள் இலக்கு!
இன்று தொடங்கிய ஐபிஎல் 2019 தொடர் போட்டியில் சென்னை மற்றும் பெங்களுரு அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்ததால் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் மற்றும் ஜடேஜாவின் அபார பந்துவீச்சால் பார்த்திவ் பட்டேல் தவிர பெங்களூரு அணியின் எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை இறுதியில் பெங்களூர் அணி 17.1 ஓவர்களில் 71 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
பெங்களூரு அணியின் ஸ்கோர் விபரம்:
ரன்கள்:
விராத் கோஹ்லி: 6
பார்த்தீவ் பட்டேல்: 29
எம்.எம்.அலி: 9
டிவில்லியர்ஸ்:9
ஹெட்மெயர்:0
டியூப்:2
கிராந்தோம்: 4
சயினி: 2
சாஹல்: 4
உமேஷ் : 1
சிராஜ்: 0
விக்கெட்டுக்கள்:
இம்ரான் தாஹிர்: 3
ஹர்பஜன் சிங்: 3
ஜடேஜா:2
பிராவோ:1
ரன் அவுட்:1