1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 14 செப்டம்பர் 2017 (20:12 IST)

தோனிக்கு பச்சை கொடி காட்டிய பயிற்சியாளர்: ரெய்னா, யுவராஜ் வெய்டிங் லிட்ஸ்டில்!!

2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்திய அணி தோனி இடம்பெருவார் என இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.


 
 
36 வயதான தோனி 2019 ஆண்டு உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவாரா? என்பது அனைவர் மத்தியிலும் எழுந்த கேள்வியாக இருந்தது.
 
யுவராஜ் சிங்கை தேர்வு குழு ஒதுக்கி வைத்தது போல அடுத்தது தோனிதான் என்று பேசப்பட்ட நிலையில் இவர்களுக்கு இலங்கைக்கு எதிரான அதிரடி ஆட்டத்தின் மூலம் தனது பதிலதித்தார்.  
 
இந்நிலையில் 2019 உலக கோப்பையில் தோனி விளையாட வேண்டும் என்று அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறியதாவது, தோனி தற்போது உடல் தகுதியிலும், ஆட்டத்திலும் நல்ல நிலையில் உள்ளார். இதனால் 2019 உலக கோப்பை வரை தோனி அணிக்கு தேவைப்படுகிறார். 
 
அவர் சிறப்பாக செயல்படும் போது மாற்று வீரர் குறித்து சிந்திக்க வேண்டியதில்லை. உலக அளவில் சிறந்த விக்கெட் கீப்பராகவும், ஒருநாள் போட்டியில் மிக சிறந்த வீரராகவும் இருக்கிறார். 
 
ரெய்னா, யுவராஜ் சிங் அணியில் இடம் பெறுவார்களா? என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது. தோனியின் செயல்பாட்டில் நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.