இந்தியா நினைத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை தகர்க்க முடியும்! ரமீஸ் ராசா கவலை
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 50 சதவீத நிதி ஐசிசியிடமிருந்துதான் வருகிறது என்று ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு சொந்த நாட்டிலேயே கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு 50 சதவீத நிதி ஐசிசியிடம் இருந்துதான் வருகிறது. அதே போல ஐசிசியின் வருவாய் 90 சதவீதம் இந்திய சந்தைகளிடம் இருந்துதான் வருகிறது. அந்த நிதியை இந்திய அரசு தடுக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைத் தகர்க்க முடியும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் மூலமாக ஐசிசிக்கு எந்த வருமானமும் செல்வதில்லை. அதனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டை வலுவாக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.