டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த அதிரடி முடிவு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டாவது பிளே ஆப் போட்டி ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது
இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் ராஜஸ்தான் கேப்டன் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்
இதனை அடுத்து பெங்களூர் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இரு அணியிலும் உள்ள வீரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதால் இன்றைய போட்டி பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் குஜராத் அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது