வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (18:24 IST)

2022 ஐபிஎல்: இறுதி போட்டிக்கு தகுதி பெறும் 2வது அணி எது?

RRVSRCB
2022 ஐபிஎல்: இறுதி போட்டிக்கு தகுதி பெறும் 2வது அணி எது?
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கிட்டதட்ட முடிவடைய உள்ளது என்பதும் இன்னும் இரண்டே இரண்டு போட்டிகள் மட்டுமே உள்ளது என்பதும் தெரிந்தது
 
இன்று நடைபெறும் இரண்டாவது பிளே ஆப் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகள் விளையாட உள்ளது 
 
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற குஜராத் அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிபெற ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் ஆகிய இரு அணிகளுமே தீவிரமாக முயற்சி செய்யும் 
 
முதலாவது பிளே ஆப் போட்டியில் தோல்வி அடைந்து சோர்வில் இருக்கும் ராஜஸ்தான் அணியை எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி வீழ்த்துமா அல்லது தோல்வியில் இருந்து மீண்டு பெங்களூர் அணியை ராஜஸ்தான் வீழ்த்துமா என்பதை இன்னும் சில மணி நேரங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்