1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 26 மே 2022 (19:36 IST)

ஐபிஎல் சூதாட்டில் ரூ.1 கோடி இழந்த அரசு அதிகாரி !

Gambling
24 குடும்பங்களில் சேமிப்புத்தொகையை வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்ட தபால் நிலைய அதிகாரியை போலீஸார் கைது செய்தனர்.

மத்திய பிரதேச மா நிலம் பினா துணை தபால் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வந்தவர் விஷால் அரிவார்.

இந்த தபால் நிலையத்தில் பொதுமக்கள் தங்கள் பணத்தை டெபாசிட் செய்திருந்தனர்.  இதற்கு அவர் போலியான கணக்குகள் தொடங்கி உண்மையான பாஸ்புகுகள் வழங்கியதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் பொதுமக்களின் சேமிப்பு பணத்தை வைத்து அவர் ஐபில் சூதாட்டத்தில் ஈடுபட்டார்.   இவர் கடந்த 2 ஆண்டாக 24 குடும்பங்களின் சேமிப்பு பணத்தை வியத்து இந்தச் சூதாட்டத்தில் பந்தயம் கட்டியுள்ளார்.

இதில் சுமார் ரூ.1 கோடி பணத்தை இழந்துள்ளார்.  இதுகுறித்து போலீஸாருக்குத் தெரியவே, அவர் மீது 420, 408 ஆகிய பிரிவுகளின் கீழ் தபால் நிலைய அதிகாரியை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.