திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 8 நவம்பர் 2020 (13:46 IST)

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் ரடால் அதிர்ச்சி தோல்வி!

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் ரடால் அதிர்ச்சி தோல்வி!
கடந்த சில நாட்களாக பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற முக்கிய போட்டி ஒன்றில் முன்னணி வீரர் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது 
 
பாரிஸ் மாஸ்டர் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஃபேல் நடால் ஜெர்மனியின் அலெக்சாண்டர் என்பவருடன் மோதினார் இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் அலெக்சாண்டர் வெற்றி பெற்றார். இதனை அடுத்து அலெக்சாண்டர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது