செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (10:44 IST)

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் சாம்பியன்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் சாம்பியன்
கடந்த சில நாட்களாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது
 
இந்த போட்டியில் போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் 
 
நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் சோபியா கெனின் என்பவருடன் மோதியய போலந்து நாட்டை சேர்ந்த இகா ஸ்வியாடெக் மிக அபாரமாக விளையாடி 6-4, 6-1 என்ற நேர்செட் கணக்கில் மிக எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்
 
இவர் பெரும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இகா ஸ்வியாடெக் அவர்களுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்