வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 18 ஏப்ரல் 2020 (16:02 IST)

இந்த போட்டிகளில் மட்டும் டீகாக் கேப்டனாக நியமிக்கப்பட மாட்டார்! ஸ்மித் திட்டவட்டம்!

வலுவிழந்து காணப்படும் தென் ஆப்பிரிக்க அணிக்கு புதிய ரத்தம் பாய்ச்சும் விதமாக லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் 2019 ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்கா மிக மோசமாக தோற்றது. அதன் பின் ஆம்லா போன்ற வீரர்களின் ஓய்வு அந்த அணியை மேலும் தொய்வடய வைத்தது. கிரீம் ஸ்மித் மற்றும் மார்க் பவுச்சர் ஆகியோர் வாரியத்தில் புதிதாகப் பொறுப்புகளை ஏற்றனர்.

இதையடுத்து அணியைப் பலப்படுத்தும் விதமாக இளம் வீரர் குயிண்டன் டீகாக் லிமிடெட் ஓவர் போட்டிகளில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளிலும் அவரே கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய தென் ஆப்பிரிக்க வாரியத்தின் இடைக்காலத் தலைவர் ஸ்மித் ‘டீகாக் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக செயல்படுவார். ஆனால் அவருக்கு அதிக வேலைப்பளு கொடுக்கக் கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் என்று ஒருவர் பெயரை தற்போது குறிப்பிட முடியாது. அதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வீரர்கள் இப்போது தகுதியோடு உள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.