மீண்டும் அணிக்குள் வரவேண்டுமா… அப்போ இதை செய்யுங்கள் – டிவில்லியர்ஸுக்கு பவுச்சர் நிபந்தனை !

Last Modified வெள்ளி, 6 மார்ச் 2020 (14:00 IST)

தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் மீண்டும் அணியில் இணைய ஒரு நிபந்தனையை விதித்துள்ளார் மார்க் பவுச்சர்.

ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஏ பி டிவில்லியர்ஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அந்நாட்டு வாரியத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே அவர் விலகினார் என சொல்லப்பட்டது.

ஆனால் 2019 ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் விளையாட அவர் முயற்சி செய்தார். ஆனால் அதற்கு வாரியம் சம்மதிக்கவில்லை. உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்கா மிக மோசமாக தோற்றது. அதன் பின் ஆம்லா போன்ற வீரர்களின் ஓய்வு அந்த அணியை மேலும் தொய்வடய வைத்தது. கிரீம் ஸ்மித் மற்றும் மார்க் பவுச்சர் ஆகியோர் வாரியத்தில் புதிதாகப் பொறுப்புகளை ஏற்றனர்.

அவர்கள் இப்போது டிவில்லியர்ஸை அணியில் சேர்க்க முடிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு நடக்கும் டி 20 உலகக்கோப்பை போட்டியில் அவர் விளையாடுவார் என தெரிகிறது. டி 20 போட்டிகள் மட்டுமில்லாமல் அவர் மீண்டும் ஒருநாள் போட்டிகளிலும் விளையாட ஆர்வமாக உள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் மீண்டும் மார்க் பவுச்சர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளதாவது ‘நாங்கள் டி 20 உலகக்கோப்பைக்கு தரமான அணியை அனுப்ப விரும்புகிறோம். ஐபிஎல் தொடரில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் விளையாட விரும்புகிறார்கள். ஆனால் அதற்குப் பிறகான இலங்கை தொடரில் ஸ்டெயின் மற்றும் டிவில்லியர்ஸ் போன்றவர்கள் அணிக்குள் இணையவேண்டும். அப்போதுதான் அவரை அணிக்குள் மீண்டும் சேர்ப்பது குறித்தது யோசிப்போம்’ எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :