புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 16 அக்டோபர் 2018 (22:02 IST)

புரோ கபடி 2018: பெங்கால் வாரியர் அபார வெற்றி

கடந்த சில நாட்களாக புரோ கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக சென்னையில் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது ஹரியானாவில் அடுத்தகட்ட போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியும், தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் மோதியது. ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் கடுமையான ஈடுகொடுத்து ஆடினாலும் பெங்கால் அணி வீரர்கள் விடாமுயற்சியுடன் விளையாடியதால் வெற்றி பெற்றனர்.

பெங்கால் வாரியர்ஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 30-25 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தது. இன்றைய போட்டியில் டாப் ரைடராக நிலேஷ் சலுங்கே தேர்வானார்.

தற்போது ஹரியானா அணிக்கும் ஜெய்ப்பூர் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்று வருகிறது. இன்னும் சில நிமிடங்களில் வெற்றி பெறுவது யார் என்பது தெரிந்துவிடும்