வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 8 நவம்பர் 2018 (22:32 IST)

புரோ கபடி போட்டி: டெல்லி, பெங்களூரு அணிகள் வெற்றி

கடந்த சில வாரங்களாகவே புரோ கபடி தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று டெல்லி-ஹரியானா மற்றும் பெங்களூரு-உபி அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றது.

முதல் போட்டியில் டெல்லி, ஹரியானா ஆகிய இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதியதால் வெற்றி யாருக்கு? என்பதை முடிவு செய்ய முடியாத நிலை இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் டெல்லி அணி சுதாரித்து ஆடியதால் 39-33 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியானாவை வீழ்த்தியது.

அதேபோல் பெங்களூர் மற்றும் உபி அணிகளுக்கு இடையிலான இன்னொரு போட்டியில் ஆரம்பம் முதலே பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. இறுதியில் 37-27 என்ற புள்ளிக்கணக்கில் உபி அணியை பெங்களூரு அணி வென்றது.